Published : 16 Apr 2022 06:17 AM
Last Updated : 16 Apr 2022 06:17 AM

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் தொகுதிக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள்: அண்ணாமலை தகவல்

கல்பாக்கம்: கூவத்தூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால், தொகுதிக்கு 50 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வேத சுப்பிரமணியன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வரும் 2024-ம் ஆண்டுநாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்பாஜகவுக்குதான் மக்கள் வாக்களிக்கஉள்ளனர். இதில், நிச்சயமாக குறைந்தபட்ச இலக்காக 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

இந்த வெற்றி நமக்கு கிடைத்தால், மத்தியில் எப்படியாவது போராடி தமிழகத்துக்கு 5 கேபினெட் அமைச்சர்கள் பெற்று தருவது என்னுடைய பொறுப்பு. ஆனால், தமிழகத்தில் மீண்டும் திமுக வெற்றி பெற்றால், ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், பிஎஸ்என்எல்மூலம் இலவச தொலைபேசி, 2 உதவியாளருக்கு இலவச சம்பளம் மட்டுமே கிடைக்கும். இப்போதும், தமிழக திமுகஎம்பிக்களுக்கு இதுதான் கிடைத்து வருகிறது. வேறு எதுவும் கிடைக்காது.

அதனால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.50 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும். தற்போது, தமிழகஎம்பிக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழக எம்பிக்கள் பேசினாலும் வேலை நடக்காது. எனவே, வரக்கூடிய தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x