Published : 05 Apr 2016 08:54 AM
Last Updated : 05 Apr 2016 08:54 AM

அதிமுகவில் கதவடைப்பு: வாசன் அவசர ஆலோசனை

கூட்டணி கதவை அதிமுக அடைத்துள்ளதால் தமாகாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய தலைவர்களுடன் வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்கிரஸிலிருந்து விலகி தமாகாவை தொடங்கிய வாசன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக கட்சி தொடங்கிய கடந்த 15 மாதங்களில் அதிமுக அரசை விமர்சிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட் பாளர் பட்டியலை முதல் வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா நேற்று வெளியிட்டார். அதில் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இத னால் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வாய்ப்பு மறுக் கப்பட்டுள்ளது. திமுகவிலும் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது.

‘தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தமாகா பலம் வாய்ந்த கட்சியல்ல’ என வாசன் ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளார். எனவே, அக்கட்சி தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பில்லை.

தற்போதைய நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இணைவதைத் தவிர வாசனுக்கு வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வீடுதேடி வந்து அழைத்தபோது கண்டுகொள்ளாத வாசன், இப்போது அவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமாகாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் வாசன் நேற்று இரவு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தமாகா தங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். பாமகவும் வாசனுக்கு அழைப்பு விடுத்து வருவதாகக் கூறப் படுகிறது.

இது தொடர்பாக தமாகா முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதிமுகவை கடைசி வரை நம்பினார். 20 தொகுதிகள் வேண்டும் என வாசன் கேட்டார். ஒற்றை இலக்கத்திலேயே நின்ற அதிமுக கடைசியாக 12 மட்டுமே தர முடியும் என்றது. அதனை ஏற்க வாசன் தயங்கியதால் ஜெயலலிதா அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனால் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி மக்கள் நலக் கூட்டணிக்கு செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அங்கும் கவுரவமான தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x