

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மாவட்ட சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் ராஜாமணி. இவர் இன்று தனது காரில் வெளியூர் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் திடிரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தனித் துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.