Published : 15 Apr 2022 05:20 AM
Last Updated : 15 Apr 2022 05:20 AM
சென்னை: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரதியாரின் ஆள் உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்துவைத்தார்.
பாரதியார் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரதியார் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாரதியாரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் பரிசுகள் வழங் கினார்.
அதைத் தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ., தமாகா தலைவர்ஜி.கே.வாசன், பாமக எம்எல்ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், பாரதிய வித்யா பவன் தலைவர் ‘இந்து’ என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT