Published : 14 Apr 2022 06:25 AM
Last Updated : 14 Apr 2022 06:25 AM
விழுப்புரம்:விழுப்புரம் அருகே கோலியனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, நடுத்தெரு, தோப்புத் தெரு, தொடர்ந்தனூர் ஒட்டுத் தெரு ஆகிய நான்கு தெருக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்க 2021-22 ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந் தத்தை கோலியனூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி தெய்வ சிகாமணி என்பவர் எடுத்துள்ளார்.
ஆனால் சிமெண்ட் சாலைகள்அமைக்கப்படாமல் 4 தெருக்க ளிலும் சிமெண்ட் சாலை போடப் பட்டதாக கல்வெட்டுகள் வைத்து, திட்டமதிப்பீடு எவ்வளவு, எத்தனை நாட்களில் முடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனைக் கண்ட இக்கிராம மக்கள், ‘சாலை அமைக்காமலே எப்படி கல்வெட்டுகள் அமைக்க முடியும்?’ என ஊராட்சி செய லாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி செயலாளர் தனக்கு எதுவும் தெரியாது என கூறி யுள்ளார்.
இதனையடுத்து கிராம இளைஞர்கள் ஒன்ற சேர்ந்து, ‘எங்கள் ஊரில் போட்டப்பட்ட சிமெண்ட் சாலையை காண வில்லை’ என ஊர் முழுக்க சுவ ரொட்டிகள் அடித்து தெருக்களில் ஒட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT