Published : 14 Apr 2022 06:30 AM
Last Updated : 14 Apr 2022 06:30 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி அலுவல கத்தில், ஆதார் அட்டை விண்ணப்பதாரர்களை அலைய விடுவதாகபயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில், ஆதார் அட்டைக் காகவும், குடும்ப அட்டைக்காகவும் விண்ணப்பிக்கும் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. அங்கு ஆதார்அட்டைக்கு விண்ணப்பிக்க வரும் போது, அவர்களிடம் அதற்கான விண்ணப்பத்தை, அலுவலகம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் ரூ.5 கொடுத்து வாங்கி வரச் சொல்கின்றனர். அவற்றை பூர்த்தி செய்துகொடுக்கும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்கின்றனர். அதன் பிறகு அவர்களை அலைய விடு வதாக கோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பூதாமூர் கிராத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கூறு கையில், "கடந்த 20 நாட்களாக ஆதார் அட்டைக்காக அலைந்து கொண்டிருந்தேன். தற்போது தான், அங்கு புரோக்கராக செயல்படும் பூ வியாபாரி மூலம் விண்ணப்பித்தால், அவரிடம் சன்மானமாக சில ஆயிரம் வரை செலுத்தினால் உடனடியாக ஆதார் அட்டை கிடைப்பதாக தகவல் கிடைத்துள் ளது. இந்த தகவலின் பேரில், பூ வியாபாரியை பார்க்க செல்கி றேன்" எனத் தெரிவித்தார். இதேதகவலை தான், நகராட்சி அலுவ லகத்தில் ஆதார் அட்டை எடுக்க வந்து காத்திருத்த பயனாளிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலக பணியாளர்களிடம் கேட்ட போது, "விண்ணப்பங்கள் அளிப் பவர்களிடம் டோக்கன் முறையில் ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரித்து வழங்கி வருகிறோம். யாரையும் தேவையின்றி அலைய விடுவதில்லை. இதில் பூ வியாபாரி சிலருக்கு உதவி செய்ய வருவார்" எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT