சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதா? வேண்டாமா? - குழப்பத்தில் பாமக

சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதா? வேண்டாமா? - குழப்பத்தில் பாமக
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை போட்டியிட வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பாமக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2 கட்டங்களாக 117 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குரு, ஜெயங்கொண்டம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முதல்வர் வேட் பாளர் அன்புமணி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் இது வரை அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, அன்புமணி ராமதாஸை போட்டியிட வைப்பதா, வேண்டாமா என்ற பெரும் குழப் பத்தில் பாமக தலைமை இருப்ப தாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக பாமக நிர் வாகிகள் சிலர் கூறியதாவது:

அன்புமணி ராமதாஸ் ஸ்டார் வேட்பாளர். தமிழகத்தில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் கண்டிப்பாக வெற்றி பெறு வார். அதே நேரத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாமகவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அன்புமணிக்கு சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே அவர் எம்.பி.யாக இருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் எம்பி அல்லது எம்எல்ஏ பதவிகளில் ஏதாவது ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால், அன்புமணி மீது மக்கள் வைத்திருக்கும் நம் பிக்கை போய்விடும். அன்புமணி போட்டியிட வில்லை என்றால், முதல்வர் வேட் பாளரே போட்டியிடவில்லை என்று மற்ற கட்சிகள் விமர்சிக்கக் கூடும்.

அதனால், அன்புமணியை போட்டியிட வைப்பதா, வேண் டாமா என்று ஆலோசனை நடத் தப்பட்டு வருகிறது. அன்புமணி போட்டியிடுவது உறுதியானால் அவர் போட்டியிடுவது பென்னாகரம் தொகுதியாகத்தான் இருக் கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in