நடப்பாண்டில் மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு; பொருளாதார நிலை ஆய்வு மேற்கொள்ளப்படும்: தமிழக அரசு

நடப்பாண்டில் மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு; பொருளாதார நிலை ஆய்வு மேற்கொள்ளப்படும்: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை : தமிழக மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தாண்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீன்வளத்துறை மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 1978, 1986, 2000, 2010 ஆகிய ஆண்டுகளில் மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைப்போன்று மீனவர்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வினை நடத்தவும் தமிழக மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் மீனவ மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவில் மேம்பட்டுள்ளது. இனிமேல் எதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in