Published : 05 Apr 2016 04:01 PM
Last Updated : 05 Apr 2016 04:01 PM

அதிமுகவுக்கும் பாமகவுக்கும் நேரடிப் போட்டி: ஜி.கே.மணி பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாமகவுக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

பாமக மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது:

‘உங்கள் ஊர், உங்கள் அன்பு மணி’ என்ற தலைப்பில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி மக்களை நேரில் சந்தித்து அவர் கள் குறைகள் குறித்து மாவட்டம் வாரியாக பேசி வருகிறார். இந் நிலையில், வேலூர் மாவட்டத்துக் கான நிகழ்ச்சி ஏப்ரல் 7-ம் தேதி வேலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியினர் திரளாகக் கலந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியில் 21 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சில பத்திரிக்கைகள், சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது ஏற்புடையதல்ல.

மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 22 லட்சத்து 33 ஆயிரம் பேர் செயற்கை மரணம் அடைகின்றனர். அதில் 80 சதவீதம் மதுவினால் ஏற்படும் மரணம் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க பாமக முயற்சி எடுக்கும். திருப்பத்தூரில் தொப்பையாறு அணை நீண்ட காலமாக விரிவுப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், பல கிராமங்கள் பாசன வசதி இல்லாமல் உள்ளன. பாமக ஆட்சிக்கு வந்ததும், திருப் பத்தூரில் உள்ள தொப்பையாறு அணைக்கு தீர்வு கிடைக்கும்.

மக்கள் நலக்கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி யாக உள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி யிட உள்ளது. தனி தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் நிறுத்தப்படு வார்கள். இந்த தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுவதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆனால், உண்மையாக பார்த்தால் அதிமுகவுக்கும் - பாமகவுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. பாமக வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x