Published : 13 Apr 2022 06:15 AM
Last Updated : 13 Apr 2022 06:15 AM
மதுரை: மதுரை மாநகராட்சி முதல் கூட்டம் நேற்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் நாகராஜன் முன் னிலை வகித்தனர்.
மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கும், மேயராக நியமித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனுக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
கூட்டம் தொடங்கியதும், எதிர் கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன் சிலர்கள் இருக்கைகளில் அமராமல் மாமன்ற மைய அரங்கில் நின்று சொத்து உரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா: 20 லட்சம் மக்கள் சார்பாக பேச வந்துள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கவில்லை. ஒரே வரிசையாக இருக்கைகள் வழங்க வில்லை. முதல் கூட்டத்திலேயே எதிர்கட்சிகளின் குரல்வளை நெரிக் கப்பட்டுள்ளது. ஒரே முறையாக இப்படி மக்களை பாதிக்கும் வகை யில் சொத்து வரியை உயர்த்து வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதன்பின் அதிமுக கவுன்சிலர் கள் கோஷமிட்டபடி வெளி நடப்பு செய்தனர்.
ஜெயராஜ் (திமுக): தற் போதுதான் சொத்துவரி பற்றி கோரிக்கை வைத்துள்ளீர்கள். கூட்டத்தில் அமர்ந்து விவாதம் செய்ய வேண்டும். அதற்குள் வெளிநடப்பு செய்தால் எப்படி. அப்படியென்றால் உங்களுக்கு சொத்துவரி பற்றி பிரச்சினை யில்லை. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது.
உயிரியல் பூங்கா
போஸ் (காங்): மதுரையில் மக்களுக்கான பெரிய அளவிலான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. மாடக்குளத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 150 ஏக்கர் இடம் இருக்கிறது. அங்கு உயிரியியல் பூங்கா அமைக்க வேண்டும். மேலும் மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி படகு சவாரி விடலாம். நடை பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து மதுரையையும் கொடைக்கானல் ஆக்கலாம்.
குமரவேல் (மார்க்சிஸ்ட்): சொத்து வரி உயர்வை மறுபரி சீலனை செய்ய வேண்டும். செல்லூர் கண்மாயை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். மதுரையில் சாதாரண மழைக்கே சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகளை தோண்டிப் போட்டுவிட்டு சரியாக மூடாமல் சென்று விடுகின்றனர். மாநகராட்சி அனைத்துப் பணி களையும் விரைந்து செய்ய வேண் டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரும் சொத்துவரி உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆணையாளர் கார்த்திகேயன்: மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஊழியர்கள் ஊதியத் துக்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ.225 கோடி தேவைப்படுகிறது. இதில் 60 சதவீதம்தான் மாநகராட்சி வருவாய் ஈட்டுகிறது.
சையது அபுதாகீர் (திமுக): தெருவிளக்குகள் சரியாக எரிவ தில்லை. சித்திரைத் திருவிழா நேரத்தில் மதுரையில் சாலைகள் அனைத்தும் மோசமாக இருக்கிறது. வெளியூரில் இருந்து வருகிற மக்கள், மதுரையைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள். எவ்வளவு சிரமத்தை சந்திப்பார்கள்.
பூமா (பாஜக): மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ தந்துள்ள பிரதமர் மோடி படத்தை மாநகராட்சியில் வைக்க வேண்டும். என்றார்.
அதற்கு திமுக கவுன்சிலர்கள், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது, அங்கே வெறும் செங் கல் மட்டுமே உள்ளது’’ என்றனர். பாஜக கவுன்சிலர் பூமா பேசி முடித்துவிட்டு ‘பாரத் மாதாவுக்கு ஜே’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
மாநகராட்சியின் முதல் கூட்டம் முறையான ஏற்பாடுகள், இருக்கைகள் ஒதுக்கீடு இல்லாமல் கூச்சல் குழப்பத்துடன் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT