

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே கங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பிள்ளைகளை பெற்றோர் திரும்ப அழைத்துச் சென் றுள்ளனர்.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேற்கூரையும் பலவீனமாக உள்ளது. இதனால், அங்கு படிக்கும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து என்ப தால், அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த ஒரு நாள் மழைக்கு, அங்கன்வாடி மையம் உள் பகுதியில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர், மழை நீர் தேங்கி இருப்பதை அறிந்து, பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத் துச் சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, “கடந்தாண்டு பெய்த தொடர் மழைக்கு அங்கன்வாடி மையம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும், கட்டிடமும் பலவீனமாக உள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேலும் தற்காலிக தீர்வாக, அங்கன்வாடி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வும் கோருகிறோம். எனவே, மாணவர்கள் நலன் கருதி மாற்று நடவடிக் கையை துரிதமாக ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.