சித்திரை திருவிழாவில் வாகன ‘பார்க்கிங்’ எங்கே?- கண்டறிய ‘மாமதுரை’ செயலி அறிமுகம்

செயலி அறிமுக நிகழ்வு
செயலி அறிமுக நிகழ்வு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாநகர் சித்திரை திருவிழா ‘மாமதுரை’ செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், காவல் ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் அறிமுகம் செய்தனர்.

மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இத்திருவிழாவினை காண்பதற்கு லட்சக்கணக்கானனோர் திரள்வார்கள்.

இத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, சுவாமி வரும் வழிகள், மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், கோயில் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், திருவிழா நிகழ்ச்சிகளின் கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் தங்களின் மொபைல் போன் மூலமாக அறிந்து கொள்ள “மாமதுரை” என்ற செயலி உருவாக்கப்பட்டு நேற்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in