Published : 07 Apr 2016 12:45 PM
Last Updated : 07 Apr 2016 12:45 PM

மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள்: மீண்டு வருவார் என நம்பிக்கை

நத்தம் தொகுதியில் அமைச்சர் ஆர்.விசுவநாதன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நத்தம் ஆர்.விசுவநாதன்.

இவர் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே இருந்தது. இந்நிலையில் இவ ருக்கு இந்த முறை நத்தத்தில் வாய்ப்பளிக்கப் படாமல் விசுவநாதனுக்கு ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தற்போது ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த மாநில துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி. இவர் இந்த தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

திமுக சார்பில் வேட்பாளராக இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் தொகுதியில் தேர்தல் பணியை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே முடுக்கிவிட்டுள்ளார்.

மேலும் நத்தம் விசுவநாதன் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுவதால் வெளியூர் வேட்பாளர் என்றும், இவரது சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் இல்லை என்பதும் இவருக்கு பாதிப்பாக உள்ளது. தொகுதிக்குள் அனைத்து வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு சென்றுவரும் வழக்கத்தை இ.பெரியசாமி ஏற் படுத்திக்கொண்டுள்ளதால் மக் களிடமும் பரிட்சையமானவராகவும் உள்ளார். இதனால் போட்டி கடுமையாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் தனது அரசியல் வாழ்க்கையை தக்கவைக்கமுடியும் என்ற நிலையும் நத்தம் விசுவநாதனுக்கு உள்ளது.

இந்நிலையில் நத்தத்தில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷாஜகானுக்கு அதிமுக தொண் டர்கள் எந்தஅளவுக்கு ஆதரவு தெரிவிப்பர் என்ற சந்தேகம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் நத்தத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அமைச்சர் விசுவநாதனுக்கு வேலைபார்க்க ஆத்தூர் தொகுதிக்கு சென்று விட்டால், நத்தம் தொகுதியும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 தொகுதிகளையும் இழுபறியாக்க விரும்பாதநிலையில், மீண்டும் நத்தம் தொகுதியை விசு வநாதனுக்கு தரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நத்தம் வேட்பாளராக உள்ள ஷாஜகான், விசுவநாதன் ஆதரவாளர் என்பதால் எதிர்ப்பும் நிலவப்போவதில்லை. அவ்வாறு மாற்றப்பட்டால் ஆத்தூர் தொகு தியில் ஏற்கெனவே நேர்கா ணலுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பி.கே.டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x