

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே எரியும் குப்பைக் கிடங்கில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக தொடர்ச்சியாக குப்பை எரிந்து வருகிறது.
தீயை அணைக்காமல் இருந்ததற்காக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடியே 33 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான செய்தி 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி குப்பைக் கிடங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், எரியும் குப்பையை உடனடியாக அணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இனிவரும் காலங்களில் குப்பை எரிந்தால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படாமல் உடனடியாக தீயை அணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.