

ரூ.4.4 கோடி பணத்தை வீட் டில் பதுக்கிய வழக்கில் தலை மறைவாக இருந்த கரகாட்டக் கலை ஞர் மோகனாம்பாள் தனது சகோதரி யுடன் வேலூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
மோகனாம்பாள் வீட்டில் சாக்கு மூட்டை மற்றும் அட்டை பெட்டி களில் கட்டு கட்டாக ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கம், 73 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், வீட்டு அடமான பத்திரங் கள், ரூ.6.60 லட்சம் வங்கி முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை சில தினங்களுக்கு முன்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரங்கள் கடத்தும் கும்ப லுடன் நெருங்கிய தொடர்புடைய சரவணன் என்பவர் மோகனாம் பாளின் அக்காள் மகன் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே, சரவணனுடன் சேர்ந்து மோகனாம்பாள் செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை காட்பாடி வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என போலீஸார் கருதினர்.
காட்பாடி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, சரவணன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில், வேலூர் ஜே.எம்.5-வது நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் மோக னாம்பாள்(53), நிர்மலா(62) ஆகியோர் சரணடைந் தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பிரபாகரன், வரும் 11-ம் தேதி காட்பாடி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகவேண்டும் என்றும் அதுவரை வேலூர் பெண் கள் தனிச்சிறையில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் பெண்கள் தனிச்சிறை யில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மோகனாம் பாளின் வழக்கறிஞர் பாபுராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மோக னாம்பாள் வட்டி தொழிலில் சேர்த்த பணத்தைத்தான் வீட்டில் வைத் திருந்தார். அவருக்கு எழுத படிக்கத் தெரியாது. மோகனாவுக்கு வலது முழங்கால் முட்டியில் இருந்த தீவிர வலிக்காக கடந்த 2-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 7-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற் கிடையில், மோகனா குறித்த தவ றான தகவல்கள் தொடர்ந்து பத்திரி கைகளில் வந்ததால் மன உளைச் சல் அடைந்து, தாமாகவே நீதிமன்றத் தில் சரணடைந்தார். அவரால் நடக்க முடியாது என்பதால் வீல் சேரில் வந்துள்ளார்’’ என்றார்.