Published : 25 Apr 2016 11:44 AM
Last Updated : 25 Apr 2016 11:44 AM

தேர்தல் செயல்திட்டத்தை 2 ஆண்டுகளில் நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன்: அன்புமணி திட்டவட்டம்

ஆட்சிக்கு வந்தால், பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் செயல்திட்டத்தை 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன், அப்படி இல்லையென்றால் பதவி விலகுவேன் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கோவை சித்தாபுதூரில் நேற்று இரவு நடைபெற்ற பாமக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:

அன்புமணி முதல்வராக வர வேண்டும் என ஒட்டுமொத்த இளை ஞர்களும், விவசாயப் புரட்சிக்கும் அன்புமணி வந்தால்தான் முடியும் என விவசாயிகளும் முடிவெடுத்துவிட்டனர்.

மக்களின் பிரச்சினை என்ன, அதற்கு என்ன தீர்வு என்பதை விஞ் ஞான ரீதியில் சிந்தித்து திட்டங் களை வைத்துள்ளோம். எங்க ளுக்கு 5 ஆண்டுகள் போதும், 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக, அதிமுக செய்யாததை செய்வோம். அதுவும், 50 ஆண்டுகளுக்குத் தேவையானதை செய்வோம். வளர்ச்சி அரசியல் மட்டுமே நடத்துவோம்.

எங்களது தேர்தல் செயல் திட்டத்தை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். ஒருவேளை நிறைவேற்றத் தவறி னால் பதவி விலகி விடுவேன். எனக்கு ஒன்றும் பதவி ஆசை கிடையாது.

தமிழகத்தில் தற்போது மக்கள் ஆட்சி நடக்கவில்லை. யாரோ எழுதிக் கொடுப்பதை மேடையில் படித்துவிட்டுப் போகிறார்கள் ஜெயலலிதாவும், ஸ்டாலினும். அவர்களுக்கு தமிழகத்தில் என்ன பிரச்சினை என்பதே தெரியாது. ஆனால், 32 மாவட்டங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தெரி யும், அதற்கான தீர்வும் தெரியும்.

தமிழ்நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு என்ன தேவை என்பதுகூட தெரியவில்லை. நீங்கள் படிக்கக்கூடாது, இலவசங்களுக்கு கையேந்தி நிற்க வேண்டும், குடிகாரர்களாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

இந்த இரு கட்சிகளும் அரசு பணத்தை இலவசம், சாராயத்தில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், நாங்கள் கல்வி, சுகாதாரத்தில் மட்டும்தான் முதலீடு செய்வோம், இலவசம் கிடையாது. இதை என்னால் மட்டும்தான் செய்ய முடியும். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை, நம்பிக்கையில் சொல்கிறேன்.

மற்ற நாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டால் போட்டியிடும் வேட்பாளர், மக்கள் பிரச்சினைக்கு ஓடி வருவரா என்றுதான் பார்ப்பார் கள். பெருமழை வெள்ளத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர்தான் இங்கு இருக்கிறார். உங்களுக்குப் பிரச்சினை என்றால் நான் ஓடோடி வருவேன். அதனால் தான் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள், அதற்கு மேல் வேண் டாம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x