

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட் பாளர் தம்பி ஆனந்தனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் திமுக, அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் தங்களது உரிமைகளை இழக்கும் நிலையில் உள்ளனர். தமிழக மக்களிடம் இருந்த போர்க்குணம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. உரிமைக்காக போராடுவது தவறு என மக்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே டென்மார்க்கில் மட்டுமே லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம் உள்ளது. அதே வெளிப்படையான நிர்வாகத்தை தமிழகத்தில் கொண்டுவர ஊழல், லஞ்சத்தை ஒழிக்க நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தாருங்கள். ரூ.500, ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வாக்களித்துவிடாதீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது துரோகம் என்று முத்துராமலிங்கத் தேவர் கூறியுள்ளார். இதனைப் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார்.