

புதுச்சேரி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்அவுட்கள்மற்றும் கட்சி கொடிக் கம்பங்கள் ஆகியவை இன்றுமுதல் அகற்றப் படவுள்ளன என்று ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப் பித்துள்ள உத்தரவு விவரம்: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி புதுச்சேரியில் பல இடங்களில் பேனர்கள், கொடிக் கம்பங்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை அகற்றும் பணி இன்று (ஏப்.11) தொடங்குகிறது. முதலில் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்துபணிகள் தொடங்கும். வில்லிய னூர், பாகூர் பகுதிகளிலும் பணிகள்இன்று முதல் தொடங்கும். அதேபோல் வரும் ஏப்ரல் 13 முதல்புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் உள்ள பேனர்கள் அகற்றும் பணிஅண்ணாசிலை ஜங்ஷனில் இருந்து தொடங்கும்.
மண்ணாடிப் பட்டு, நெட்டப்பாக்கம் பகுதிகளிலும் இப்பணிகள் 13-ம் தேதி முதல்நடக்கும். இதற்காக ஒரு குழுஅமைக்கப்படும். இதில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், வருவாய்த்துறையில் தாசில்தார், காவல்துறை ஆய்வாளர்கள் இடம்பெறு வார்கள். பாதுகாப்புக்கு கூடுதல்போலீஸார் பணியில் இருக்க வேண்டும். பேனர்கள் அகற்றப் பட்ட பிறகு புதிதாக பேனர்கள் ஏதும்கட்டப்படவில்லை என்று துறைகள்உறுதி செய்ய வேண்டும். பொதுஇடங்களில் பேனர்கள், கட்அவுட் கள், கொடிக் கம்பங்களை புதிதாகஅமைப்பதைத் தடுக்க காவல்துறை எஸ்எஸ்பி (சட்டம் ஒழுங்கு),எஸ்எஸ்பி (போக்குவ ரத்து) உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.