

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று ஒரே நேரத்தில் தேர்தல் அலு வலகங்களை திறந்து வைத்து பிரச்சாரத்தையும் தொடங்கினர்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர்கள் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயண விவரமும் வெளியானது. அதன்படி, சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார்.
தலைமை உத்தரவு
முன்னதாக, தமிழகம் முழுவ தும் 234 தொகுதிகளிலும் நேற்று காலை 10 முதல் பகல் 12 மணிக்குள் அதிமுக தேர்தல் அலுவலகங்களை திறக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலங்கள் திறக்கப்பட்டன. 227 தொகுதி களில், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் தலைமையிலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், அத்தொகுதி அதிமுகபொறுப்பாளர்கள் தலை மையிலும் தேர்தல் அலுவலகங் கள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரச்சாரத்தையும் உடனடியாக தொடங்கினர்.
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்த பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அதிமுக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். கட்சித் தலைமை உத்தரவு என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அதிமுகவினர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.