

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆற்காடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியலின்படி இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. ஆற்காடு தொகுதிக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு சோளிங்கர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமாகாவிலிருந்து பிரிந்து நேற்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினத்துக்காக இந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டுப்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.