சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் அனுமதி சீட்டு இன்றி யாரையும் போலீஸார் அனுமதிக்க கூடாது: பழனிவேல் தியாகராஜன்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் அனுமதி சீட்டு இன்றி யாரையும் போலீஸார் அனுமதிக்க கூடாது: பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் யாரையும் அனுமதிச் சீட்டு இன்றி போலீஸார் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏப்.14-ம் தேதி திருக்கல்யாணம், 15-ம் தேதி தேரோட்டம், 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இத்திருவிழாவுக்கான பாது காப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக நாளை (ஏப்.11) முதல் 16-ம் தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சுகாதாரத் துறை சார்பில் 21 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: திருவிழா நடைபெறும் பகுதிகளுக்குள் அனுமதிச் சீட்டு இல்லாத யாரையும் அனுமதிக்க வேண்டாம். அமைச்சர்களோ, நீதித் துறையினரோ யாராக இருந் தாலும் அனுமதிச் சீட்டு இன்றி காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது என்று பேசினார்.

எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், காவல் ஆணையா் செந்தில்குமார், எஸ்பி பாஸ்கரன், கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in