Published : 03 Apr 2016 09:29 AM
Last Updated : 03 Apr 2016 09:29 AM

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவை காண பெற்றோருக்கு அனுமதி மறுப்பு: இடவசதி இல்லையென விளக்கம்

குடியாத்தம் திருமகள் ஆலை அரசுக் கல்லூரியில் நடந்த பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்க பெற் றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வேலூர் குடியாத்தம் திருமகள் ஆலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இளநிலை மாணவர்கள் 650 பேர், முதுநிலை மாணவர்கள் 201 பேர் மற்றும் எம்.பில் முடித்த 9 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஜெயராஜ் மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.

இதற்கிடையில், தங்களது பிள் ளைகள் பட்டம் பெறுவதைப் பார்க்க வந்த பெற்றோரை விழா அரங்கத் துக்குள் அனுமதிக்கவில்லை. விழா அரங்கு அருகில் இருந்த இரும்பு வலை பொருத்திய வராண்டா விலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து, மாணவர்கள் தரப் பில் கூறும்போது, ‘‘இந்த கல்லூரி யில் படிக்கும் பெரும்பாலான மாண வர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை கஷ்டப்பட்டு 3 ஆண்டுகள் படிக்க வைத்தனர். தனது பிள்ளை பட்டம் பெறுவதைத்தான் எந்தவொரு பெற்றோரும் பாக்கிய மாக கருதுவார்கள்.

ஏக்கத்துடன்

ஆனால், குடியாத்தம் திருமகள் ஆலை அரசுக் கல்லூரியில் மட்டும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் யாரும் பட்டமளிப்பு விழா அரங்குக்கு வரக்கூடாது என்று உத்தரவே பிறப்பித்தார்கள். நாங்கள் பட்டம் பெறுவதை ஜன் னல் கம்பியை பிடித்தபடி பெற்றோ ரும் உறவினர்களும் ஏக்கத்துடன் பார்த்தது பரிதாபமாக இருந்தது’’ என்றனர்.

இதுகுறித்து, கல்லூரியின் முதல் வர் பிரதாபனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘பட்டமளிப்பு விழா வுக்காக 2 கட்டிடங்களுக்கு மத்தி யில் உள்ள திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. இங்கு அதிகப்படியான நபர்களை அமர வைக்க இட வசதி இல்லை. இதனால், பட்டம் பெறும் மாணவ, மாணவிகளை மட்டும் விழா அரங்கினுள் அனுமதிக்க முடிவு செய்தோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x