Published : 08 Apr 2016 08:24 AM
Last Updated : 08 Apr 2016 08:24 AM

காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை திமுக ஒதுக்கியதில் மகிழ்ச்சி: இளங்கோவன்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேட்ட தொகுதிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

கடந்த 2011 தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்க, 35-க்கு மேல் வாய்ப்பில்லை என திமுக மறுத்துவிட்டது. இந்நிலையில், தமாகாவை கூட்டணியில் சேர்க்க திமுக முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. தமாகாவை சேர்க்க ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு 3 நாட்கள் முகாமிட்டு சோனியா, ராகுல் காந்தி, குலாம்நபி ஆகியோரை சந்தித்து நிலவரத்தை எடுத்துக் கூறினார். அப்போது கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசிய சோனியா, தேசியக் கட்சி என்பதால் கவுரவமான தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் மீண்டும் சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், இளங்கோவனும் கையெழுத் திட்டனர்.

அதன்பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய் வதற்காக திமுகவில் அக்கட்சி யின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட் டுள்ள 4 பேர் குழுவும், காங்கிர ஸில் இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவும் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. இதில், காங்கிரஸுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன

இதையடுத்து, நேற்று மாலை கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் இளங்கோவன் சந்தித்தார். அப்போது காங்கிரஸுக் கான தொகுதிகள் பட்டியல் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை இளங்கோவன் வெளியிட்டார்.

அதன்படி திருத்தணி, அம்பத் தூர், ராயபுரம், மயிலாப்பூர், பெரும்புதூர் (தனி), மதுர வாயல், ஆற்காடு, ஓசூர், கலசப் பாக்கம், செய்யாறு, ஆத்தூர் (தனி), சங்ககிரி, நாமக்கல், கோபிச்செட்டிப்பாளையம், உதக மண்டலம், காங்கேயம், தாராபுரம் (தனி), சூலூர், கோவை தெற்கு, வேடசந்தூர், கரூர், திருச்சி கிழக்கு, முசிறி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில் (தனி), வேதாரண்யம், நன்னிலம், பாபநாசம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகாசி, முதுகுளத்தூர், வைகுண்டம், தென்காசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், ‘‘காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை திமுக ஒதுக்கி யுள்ளது பெருமகிழ்ச்சி அளிக் கிறது’’ என்றார். காங்கிரஸ் கடந்த 2011-ல் வெற்றி பெற்ற ஓசூர், பட்டுக்கோட்டை, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச மாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4 தொகுதிகள் தனித் தொகுதிகள். விழுப்புரம், தருமபுரி, தேனி, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் காங்கிர ஸுக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5, புதிய தமிழகம் 4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை ஆகியவற்றுக்கு தலா 1 என 7 கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸுக்கான 41 தொகுதிகள் மட்டும் அறிவிக்கப் பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x