Published : 26 Apr 2016 09:21 AM
Last Updated : 26 Apr 2016 09:21 AM

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து நேற்று பகல் 12.05 மணிக்கு புறப்பட்ட ஜெயலலிதா பாரிமுனை, ராயபுரம், காசிமேடு, கல்மண்டபம் சிக்னல், ஜீவரத்தினம் சாலை, பிள் ளையார் கோயில் தெரு, திரு வொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தை வந்த டைந்தார்.

பகல் 12.21 மணிக்கு காரில் இருந்து இறங்கிய அவரை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.வெற்றிவேல் உள் ளிட்டோர் வரவேற்றனர். தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி டி.என்.பத்மஜா தேவியிடம் வேட்புமனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் முடிந்ததும் பகல் 12.26 மணிக்கு வெளியே வந்த ஜெயலலிதா, அங்கு நின்றி ருந்த பத்திரிகை புகைப்படக் கலை ஞர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தார். பின்னர் அவரும், சசிகலாவும் காரில் ஏறி புறப்பட்டனர்.

புறப்பட்டு செல்லும்போது காரில் இருந்தபடியே மதுசூதனன், வெற்றிவேல், அமைச்சர்கள் ஓ.பன் னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இத்தொகு திகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் வேலு மணியிடம் கேரள தேர்தல் நிலவரம் குறித்து ஜெயலலிதா கேட் டறிந்தார்.

ஜெயலலிதா வருகையை யொட்டி ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. சாலையின் இருபக்கங் களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்து ஜெயலலிதாவுக்கு மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

காத்திருந்த அமைச்சர்கள்

ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.கோகுல இந்திரா, பி.வளர்மதி, விஜயபாஸ்கர், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் சென்னை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு எதிரே காத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x