பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு கண்காட்சி

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வண்ணம் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.விஜயா ராணி திறந்து வைத்தார். உடன் அம்பத்தூர் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சௌ.இந்திரா காந்தி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை மாவட்ட ஆட்சியர்ஜெ.விஜயா ராணி திறந்து வைத்தார்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துபவர்களை ஊக்கவிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு கண்காட்சியின் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள்,உணவு தேக்கரண்டிகள், பீங்கான்பாத்திரங்கள், மண் குவளைகள் உள்ளிட்டவை, பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும்விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியை திறந்து வைத்ததை தொடர்ந்து, மஞ்சப்பைகளை பொது மக்களுக்கு விநியோகித்து அதை பயன்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in