Published : 27 Apr 2016 09:44 AM
Last Updated : 27 Apr 2016 09:44 AM

கரூரில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம்: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - கருணாநிதி வலியுறுத்தல்

கரூரில் அன்புநாதன் வீட்டில் பிடி பட்ட பணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் மன்னார்குடி டிஆர்பி ராஜா, திருத்துறைப் பூண்டி பி.ஆடலரசன், நன்னி லம் துரை.வேலன், கீழ்வேளூர் உ.மதிவாணன், வேதாரண்யம் பி.வி.ராஜேந்திரன், நாகப் பட்டினம் முகமது ஜபருல்லா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக வினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து விவேகத்துடனும், விரைந்தும் பணியாற்ற வேண் டும். வெற்றியை நோக்கிச் செல்ல பாடுபட வேண்டும். ஓட்டு வேட்டைக்காக மட்டும் மக்களை திமுக சந்திக்கவில்லை. நாட்டை சீரழிக்கும் சோம்பேறிகள், சதி காரர்களிடம் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்பதே முக்கியம்.

தமிழகத்தில் பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சியினர் முயற் சித்து வருகின்றனர். மக்களை விலைக்கு வாங்கும் அராஜக வேலைகள் நடந்து வருகிறது. திமுக கூட்டணியைத் தோற் கடிக்க, ஜனநாயகத்தை சாகடிக்க, சர்வாதிகாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது. எப்படியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.

பஞ்சாயத்து போர்டு முதல் அனைத்து இடங்களிலும் அநீதி அரசாண்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க சட்டம் இல்லையா, நீதியரசர் இல்லையா, இல்லை இவைகளைத் தட்டிக்கேட்க மனம் இல்லையா என்று தெரிய வில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் காற்றில் பறப்பதாக செய்திகள் வருகிறது. கரூர் அன்பு நாதன் வீ்ட்டில் இருந்து மக்கள் வியப்படையும் வகையில் பணம் மீட்கப்பட்டது. இதேபோல பல இடங்களில் ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. சில கொலைகளும் நடந்துள்ளன. ஏன் நடந்தது, யாரால் நடந் தது என்பது எங்களுக்குத் தெரி யும். இதுகுறித்து சிபிஐ விசார ணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் ஜனநாயக மீறல்களுக்கு அரசு அலுவலர்களும் துணைபோகின் றனர். தேர்தல் களத்தில் உள்ள நமது வேட்பாளர்கள் ஆளுங் கட்சியின் செயல்பாட்டால் வேதனையடைந்துள்ளனர். அவர் களை நாம் காக்க வேண்டும். ஜனநாயகத்தை வீழ்த்தும் கொடு மைகளை வீழ்த்த வேண்டும்.

93 வயது வரை வாழ்ந்து விட்டேன். இந்த நேரத்திலும் எனக்கு நிம்மதி இல்லை. நாட்டை யும் நாட்டு மக்களையும், ஜன நாயகத்தையும் காப்பாற்ற வேண்டுமென்பதுதான் எனது எண்ணம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x