Published : 08 Apr 2022 05:59 AM
Last Updated : 08 Apr 2022 05:59 AM

தமிழகம் முழுவதும் குற்ற வழக்குகளில் சிக்கிய திமுகவினரின் பட்டியலை சேகரிக்கும் உளவுப் பிரிவு போலீஸார்

சென்னை: கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்குவதில் காவல் துறைஎவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது. சட்டம்-ஒழுங்கு, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், திமுகவினர் சிலர் எல்லை மீறி வருவதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், திமுகவினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு விவரப் பட்டியலை உடனடியாக உளவுத் துறை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு மாநில உளவுத் துறை எஸ்.பி. சரவணன்,அனைத்து காவல் ஆணையர் கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுக்கு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், "திமுகவினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் முதல் 4.4.2022 வரை பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், எந்த மாவட்டம், எந்த காவல் நிலையம், வழக்கு எண், எத்தனைப் பிரிவில் வழக்கு,எத்தனை பேர் கைது, வழக்கின்தற்போதைய நிலை ஆகிய விவரங்களை உடனடியாக மின்னஞ்சல் மூலம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திமுக வினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், நிர்வாகம் மற்றும்பதவியில் இருக்கும் நிர்வாகிகளை பதவியிறக்கம் செய்வது குறித்தும் திமுக தலைமை திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சிக்காரர்களால் ஆட்சிக்கு எக்காரணம் கொண்டும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என் பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இதேபோல், அதிமுகவினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், பின்னணி குறித்த விவரங்களையும் உளவுத்துறை போலீஸார் திரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x