Published : 08 Apr 2022 06:28 AM
Last Updated : 08 Apr 2022 06:28 AM
கோவை: குற்றச் சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் இயக்கிய ‘லாக்டு ஹவுஸ்’ குறும்படம் நேற்று முதல் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்படும் சம்பவங்களை மையமாக வைத்து, ‘லாக்டு ஹவுஸ்’ என்ற குறும்படத்தை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ் என்ற மகேஷ்வரன் இயக்கியிருந் தார். இக்குறும் படம் கோவை, திருப்பூரில் உள்ள 80-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று முதல் திரையிடப்பட்டுள் ளது. இதுகுறித்து சிறப்பு உதவிஆய்வாளர் மகேஷ்வரன் கூறும் போது, ‘‘இப்படம் இயக்கத் தொடங்கும்போது, ரத்தினபுரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தேன். 20 நாட்களுக்கு முன்னர் பணியிடம்மாறி, தற்போது கோவை மாவட்டசிபிசிஐடியில் பணியாற்றி வருகி றேன். குற்றங்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவிக்காவிட்டால் என்ன மாதிரியான குற்றங்கள் நிகழ்கிறது என்பதை மையப்படுத்தி, நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘லாக்டுஹவுஸ்’ என்ற தலைப்பில் ஒரு நிமிடம் 59 விநாடிகள் ஓடும் குறும்படம் இயக்கியுள்ளேன்.
இது எனது 13-வது குறும்படம். இதற்கு முன்பு, இது தகுமா?, நில் கவனி செல்!, அவர் வருவாரா? உள்ளிட்ட 12 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். இவை அனைத்தும் போக்குவரத்து விதிகள் மற்றும்குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு படங்களா கும். ‘லாக்டு ஹவுஸ்’ குறும்படம், கடந்த ஜனவரியில் ஷூட்டிங் நடத்தப் பட்டது. பின்னர், சென்னையில் ‘யு’ தணிக்கைச் சான்று பெறப்பட்டது. காவல் ஆணையர் பிரதீப்குமார், சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெயசீலனுக்கு அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், இந்த விழிப்புணர்வு குறும்படம் நேற்று முதல் கோவை, திருப்பூரில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் இப்படத்தை இயக்குவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT