Published : 08 Apr 2022 06:52 AM
Last Updated : 08 Apr 2022 06:52 AM

வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் 3 மணி நேரம் மின் வெட்டு

வேலூர்: வேலூர் மேற்கு உப கோட்ட பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (8-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்துக்கு மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க 2022-23 ஆண்டுக்கான பருவ கால ஆய்வு மற்றும் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் 8- ம் தேதி (இன்று) முதல் வரும் 22- ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, காலை 7 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (8-ம் தேதி) பழைய பைபாஸ் ரோடு, தோட்டப்பாளை யம், காட்பாடி ரோடு, கழனிபாக்கம், கந்தனேரி வரை. வரும் 9-ம் தேதி (நாளை) கழினிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் (விரிஞ்சி புரம்). வரும் 11-ம் தேதி பெங்களூர் ரோடு, மக்கான் சந்திப்பு, காந்திரோடு, சிறுகாஞ்சி, சதுப்பேரி, சேண்பாக்கம், அகமேடு, செம்பேடு, ஜமால்புரம், தெள்ளூர், ஊசூர், ராஜாபாளையம், புத்தூர், பூதூர், வி.ஆர்.பாளையம், சேக்கனூர், இறைவன்காடு, விரிஞ்சிபுரம், சத்தியமங்கலம்.

வரும் 12-ம் தேதி வேலூர் நியூ பைபாஸ் ரோடு, சர்வீஸ் ரோடு, ராமஜெயம் ஷெட், கிரீன் சர்க்கிள், ஜிஆர்டி ஓட்டல் பின்புறம், வைகை நகர், அப்துல் கலாம் நகர், கருகம்பத்தூர், தாஜ்புரா, பெருமாள் நகர், இறைவன்காடு. வரும் 13-ம் தேதி வேலூர் நியூ பைபாஸ் ரோடு, வடக்கு காட்பாடி ரோடு, செல்லியம்மன் கோயில் மற்றும் நறுவீ மருத்துவமனை வரை, கே.கே.நகர், ஜீவா நகர், கீழ்மொணவூர், மேல்மொணவூர், ராஜாபாளையம், சேக்கனூர், மலைக்கோடி, ஊசூர், சத்தியமங்கலம், பொய்கை சமத்துவபுரம்.

வரும் 16-ம் தேதி மண்டித்தெரு, மெயின் பஜார், பிஎஸ்எஸ் கோயில் தெரு, ஜெயராம் செட்டி தெரு, பொன்னுசாமி ஐயர் தெரு, வசந்தபுரம், சேண்பாக்கம், புத்தூர், பூதூர், வசந்தநடை, காட்டுக்கொல்லை. வரும் 18- ம் தேதி கே.கே.நகர், முள்ளிப்பாளையம், மதினா நகர், ஜெண்டா தெரு, சின்னையா தெரு, செதுவாலை, அன்னாசிபாளையம், மருதவள்ளி பாளையம், வேலங்காடு, வல்லண்டராம். வரும் 19- ம் தேதி மாங்காய் மண்டி, சம்பத் நகர். வரும் 20-ம் தேதி சொக்கலிங்கம் நகர், கருகம்பத்தூர், அன்னாசிபாளையம், மருதவள்ளிபாளையம், வேலங்காடு. வரும் 21- ம் தேதி அப்துல்லாபுரம், பிள்ளையார்குப்பம், மோட்டூர், அன்பூண்டி. வரும் 22- ம் தேதி அப்துல்லாபுரம் மோட்டூர் ஆகிய பகுதிகளில் காலை நேரத்தில் 3 மணி நேரத்துக்கு மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x