

ஆசிய ஓஸியானா ஃபெடரேஷன் ஃபார் செக்ஸுவாலஜி என்கிற சர்வதேச மருத்துவ அமைப்பின் தலைவராக பிரபல செக்ஸு வாலஜிஸ்ட் டாக்டர் டி.நாராயண ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசிய ஓஸியானா ஃபெடரேஷன் ஃபார் செக்ஸுவாலஜி என்கிற சர்வதேச மருத்துவ அமைப்பு ஆஸ்திரேலியாவை தலைமையிட மாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அமைப்பின் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெவ்வேறு நாடுகளில் மருத்துவ காங்கிரஸ் நடைபெறும். இந்த அமைப்பின் 14-வது மருத்துவ காங்கிரஸ் கடந்த மார்ச் 31-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை தெற்கு கொரியாவில் நடைபெற்றது. இதன் 15-வது மருத்துவ காங்கிரஸ் 2018-ல் பிரபல செக்ஸுவாலஜிஸ்ட் டாக்டர் டி.நாராயண ரெட்டி தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆசிய ஓஸியானா ஃபெடரேஷன் ஃபார் செக்ஸுவாலஜி அமைப்பின் தலைவராகவும் டாக்டர் டி.நாராயண ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 2018 வரை இவர் இந்தப் பதவிவை வகிப்பார்.
இதுகுறித்து பேசிய அவர் ‘‘இது வரை நடைபெற்ற 14 மருத்துவ காங்கிரஸிலும் பாலியல் பிரச்சினை கள் மட்டும்தான் விவாதப் பொரு ளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. நடைபெறப்போகிற 15-வது மருத் துவ காங்கிரஸில் ‘தரமான வாழ்க் கைக்கான ஆரோக்கியமான செக்ஸ்’ என்கிற கருத்துரு வாக்கத்தில் உலகளவில் 300 செக்ஸுவல் மருத்துவ நிபுணர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
விவாதங்கள்
பொதுவாக சிலர் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்பார்கள். யதார்த்தத்தில் சொல்லித் தெரிந்துக்கொள்வது தான் மன்மதக் கலையாகும். இந்தக் மருத்துவ காங்கிரஸில் செக்ஸ் பிரச் சினையில் கணவனும் மனைவியும் எப்படி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது? பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் வழி முறைகள், திருநங்கைகளின் வாழ் வியல் பிரச்சினைகள், வாழ்வியல் முறைகளை எப்படி வைத்துக் கொண்டால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமான செக்ஸ் உறவை வைத்துக்கொள்ளலாம் போன்ற தலைப்புகளில் விவாதிக்க உள்ளோம்’’ என்றார்.