

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியது: தேர்தல் பறக்கும்படை அலுவலர் களுக்கு, பணம் எங்கு, யாரிடம் உள்ளது என்பது நன்றாகத் தெரியும். ஆனால், சோதனை என்ற பெயரில் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற் படுத்துகின்றனர்.
வாகன சோதனைகளால், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள்தான் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், பொருட்களை வாங்கி, விற்பதையே நிறுத்தி விடலாமா என்று வணிகர்கள் யோசிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்களைப் பாதிக்கும் சோதனை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடி யாகக் கைவிடவேண்டும். தேர் தல் ஆணையத்தைக் கண்டித்து வரும் 12-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வணிகர்களின் கோரிக்கை களை ஏற்று, அவற்றை தேர்தல் அறிக்கையில் வெளி யிடும் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும்.