தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்: ஜேஎன்யு மாணவர் சங்க துணைத் தலைவர் வலியுறுத்தல்

தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்: ஜேஎன்யு மாணவர் சங்க துணைத் தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் கூறினார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கையைப் பரப்ப மத்திய அரசு துடிக்கிறது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், கல்வி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன. சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற தாக்குதல்களால் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர்கள் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராடினால், தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கவுரவக் கொலைகள் பெருகி வருகின்றன. இது எல்லாவற்றை யும் ஒழிக்க வேண்டும். எனவே, தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். சாதிமறுப்பு திரு மணம் செய்பவர்களை பாதுகாக் கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை தவிர்க்க, சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தி அகில இந்திய மக்கள் மேடை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் 3-ம் தேதி (இன்று) கருத்தரங்கம் நடக் கிறது. இதில் கல்வியாளர் வே.வசந்திதேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், பத்திரிகையாளர் ஞாநி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தினர் பிரச் சாரம் செய்வார்களா என்று ஷெஹ்லாவிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் அரசியல் கட்சி அல்ல. பாஜகவின் மதவாதப் போக்கை கண்டித்து இதுபோல கருத்தரங்கு களை நடத்துவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in