Published : 04 Apr 2016 08:31 AM
Last Updated : 04 Apr 2016 08:31 AM

விடுபட்ட சில தொகுதிகளுக்கு அதிமுகவில் இன்று நேர்காணல்

அதிமுகவில் கடையநல்லூர், காங்கேயம், குடியாத்தம் தொகு திகளுக்கு இன்று நேர்காணல் நடப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் குறிப்பிட்ட சிலரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகள், திருவாரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தொகுதிகளுக்கு இதுவரை நேர்காணல் நடக்கவில்லை. விடு பட்ட தொகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு அழைப்பு வருமா என்று எதிர்பார்த்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டத் துக்கும் அதிமுக தலைமை அலு வலகத்துக்கும் தினமும் வந்து செல்கின்றனர்.

கடந்த 2 நாட்களாக நேர் காணல் நடக்கவில்லை. இந்நிலை யில், வேலூர் மாவட்டம் குடி யாத்தம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நெல்லை மாவட் டம் கடையநல்லூர் ஆகிய தொகு திகளுக்கு விருப்ப மனு அளித் தவர்கள் இன்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

குடியாத்தம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட் டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசனின் சொந்த ஊர் ஆகும். ஆனால், கடந்தமுறை அவர் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை, அவர் சொந்த தொகுதியில் நிற்பார் என கூறப் பட்டது.

இதனால், வேலூர் மாவட்ட நேர்காணல் நடந்தபோது குடி யாத்தம் தொகுதிக்கு யாரையும் அழைக்கவில்லை. ஆனால், தற்போது திடீரென அந்தத் தொகு திக்கு நேர்காணல் நடத்தப் படுகிறது.

அதேபோல, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன், அத்தொகு தியில் அவரது மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x