

கள்ளக்குறிச்சி: இரு ஆண்டுகளுக்குப் பின் கூவா கம் கூத்தாண்டவர் கோயில் சித்தி ரைத் திருவிழா நேற்று சாகை(கூழ்) வார்த்தலுடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயி லில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நடைபெறும். 16-ம்நாள் நிகழ்வில், மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில் அழுகளம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பங் கேற்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் வரு வதுண்டு.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் நடப்பாண்டில் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இந்த கூத்தாண்டவர் திருவிழாவின் தொடக்க நிகழ்வு சாகை (கூழ்) வார்த்தலுடன் நேற்று நடந்தது. இதையொட்டி கூவாகத்தைச் சுற்றியுள்ள 8 கிராம மக்கள் கூழ் தயாரித்து, அவற்றை கோயிலில் படையலிட்டனர். பின் னர் அவற்றை கரைத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங் கினர்.
18 நாட்கள் நடைபெறும்.கூத்தாண்டவர் திருவிழாவின் முக்கிய விழாவான சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து அன்றைய தினம் அரவாணுக்கு திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் திருநிகழ்வும், மறுநாள் 20-ம் தேதி அழுகளம் பூண்டு தாலி அறுக்கும் சோக நிகழ்வும், அதைத் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிகழ்வு நடைபெறாததால் இம்முறை நாடு முழுவதும் இருந்துஏராளமான திருநங்கைகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.