Published : 06 Apr 2022 06:00 AM
Last Updated : 06 Apr 2022 06:00 AM

வழக்கறிஞர்கள், நீதிபதிகளை அவமானப்படுத்திய ராமதாஸ் மன்னிப்பு கோர வேண்டும்: நடிகர் கருணாஸ்

கமுதி: கமுதியில் நடிகர் எஸ்.கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: வன்னியர் உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படை உட்பட பலர் வழக்கு தாக்கல் செய்து அவரவர் தரப்பிலும், எதிர்த்தரப்பில் பாமக மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இதில் அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்களில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்துவும் ஒருவர். இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் பாமக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்த சாதிக்காக உதவியதாக குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், அவர் நீதிபதி அல்ல நீதி பாதி என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையிலேயே இருவரும் வசைபாடியுள்ளனர். இதனை கண்டிக்காமல் அவர் ரசித்துக் கொண்டிருந்தது பெரும் கண்டனத்துக்குரியது.

மேலும் நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்திய ராமதாஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவர்களின் பேச்சு நீதித்துறையை மிரட்டும் தொனியில் உள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவாக நடைபெற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x