சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றுஅதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.5-ம் தேதி (இன்று)கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்தது.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலும், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையிலும் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in