தமிழகத்தில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி நிறைவு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம்
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 4,805 கோடி ரூபாய் அளவில் 97.05 சதவீதம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்ஸ ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து போலி நகைகளை அடகு வைத்தும் மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றது போன்றவை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 97.05 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பயனாளிகளுக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பயிர்க்கடன் அடிப்படையில் ரூ.10,000 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in