

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரி வித்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப் படும் என தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் பி.வாசு தெரி வித்தார்.
இதுகுறித்து திருச்செங் கோட்டில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பி.வாசு நிருபர்களிடம் கூறியதாவது:
பூசாரிகள் நலவாழ்வுக்கு பல அரிய திட்டங்களை செயல் படுத்திய தமிழக முதல்வர் ஜெயலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். மேலும், 234 தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரித்து பிரச் சாரம் செய்வது எனவும் தீர் மானித்துள்ளோம்.
மீண்டும் ஜெயலலிதா முதல்வரானவுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள பூசாரி கள் நலவாரியத்துக்கு கிராம பூசாரியை தலைவராக நியமிக்க வேண்டும். ஒரு கால பூஜை நடக்கும் கோயில் பூசாரிகளுக்கு மாத சம் பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை பொதுக்குழு கூட்டத்தில் நிறை வேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.