படம்: ட்விட்டர் உதவி
படம்: ட்விட்டர் உதவி

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; பலர் காயம்

Published on

கலிப்போர்னியா:அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர்.

கலிபோர்னியா மாகாண தலைநகர் சேக்ரமென்டோவில் உள்ள முக்கியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை தனி நபர் நடத்தினரா? அல்லது ஒரு கும்பல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதா என்று இதுவரை தெரியவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தற்போதைய நிலவரம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இரு கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இதில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கலிப்போர்னியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சேக்ரமென்டோ மேயர் டேரல் ஸ்டெய்ன்பெர்க் கூறும்போது, “ இந்த துயரத்தை வார்த்தைகளால் கூற முடியாது. இந்த சோகமான சம்பவத்தில் சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்துள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in