அரசு குடியிருப்பில் உள்ள வேட்பாளர்கள்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

அரசு குடியிருப்பில் உள்ள வேட்பாளர்கள்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
Updated on
1 min read

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேட்பாளர்கள் எம்பி, எம்எல்ஏக்களாக இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பை பயன்படுத்தியிருந்தால், குடிநீர், தொலைபேசி, மின்சார கட்டணத்தில் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழை குடியிருப்பு அளித்த துறையிடம் இருந்து பெற்று, கூடுதலாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பயன்படுத்தாதவர்களும், பயன்படுத்தவில்லை என்பதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களிடம், இதுகுறித்த தகவல்களை வழங்கி, 29-ம் தேதிக்குள் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்தும்படி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் இந்த கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்ளாட்சி தலைவர்கள்

ஒரு கவுன்சிலர், மேயர் பதவிக்கு போட்டியிட்டால் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற உள்ளாட்சி பதவியில் இருக்கும் ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? இல்லையா என்பதை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விளக்கம் விரைவில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து செலவின பார்வையாளர்கள் 123 பேர் தமிழகம் வந்து, கண்காணிப்பை மேற்கொண்டனர். இவர்கள் 29-ம் தேதி சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர். அதே நாளில், 2 தொகுதிகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள 123 பொது பார்வையாளர்கள் தமிழகம் வரு கின்றனர். தொடர்ந்து, சொந்த மாநி லங்களுக்கு திரும்பிய செலவின பார்வையாளர்கள் மீண்டும் மே 3-ம் தேதி தமிழகம் வருகின்றனர். அதன் பின் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

தமிழக தேர்தல் செலவுகளுக் காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் இறுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 29-ம் தேதி வெளியிடப்படும். இதுவரை, 8.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in