Published : 10 Apr 2016 11:23 AM
Last Updated : 10 Apr 2016 11:23 AM

திருவள்ளூரில் வேளாண்மைக் கல்லூரி: அன்புமணி உறுதி

திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு பாமக சார்பில் நடைபெற்ற ‘உங்கள் ஊர், உங்கள் அன்புமணி’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராம தாஸ் பேசியதாவது: ஊழல் மற்றும் லஞ்சத்தை பொது மக்கள் சகித்து பழகிவிட்டனர். சகித்தது போதும், விழித்தெழுங் கள். 5 ஆண்டுகள் மட்டும் எனக்கு வாய்ப்பளியுங்கள். அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் 50 ஆண்டுகளில் செய் யாததை, 5 ஆண்டுகளில் செய்வேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச பொருட்களை தரமாட்டோம். மாறாக சி.பி.எஸ்.சி. தரத்துக்கு இணையான கல்வி, தரமான சுகாதாரம், வேளாண் இடு பொருட்களை இலவசமாக வழங்குவோம்.

தஞ்சாவூருக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் அதிக நீர் வளம் உள்ள மாவட்ட மாக உள்ளது. ஆனால், இம்மாவட்டத்தில் விவசாயிக ளுக்கு மரியாதை இல்லாமல் உள்ளது. பாமக ஆட்சியில் அந்த நிலையை மாற்றுவோம். திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, அதி நவீன வசதியுடன் கூடிய மருத் துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, தொழிற்சார் பயிற்சி மையம், திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரிங்க் ரோடு ஆகியன அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x