Published : 04 Apr 2022 06:24 AM
Last Updated : 04 Apr 2022 06:24 AM

அரிக்கமேட்டுடன் தொடர்புடைய வணிக நகரங்களை கண்டறிய புராணசிங்குபாளையத்தில் விரைவில் அகழாய்வு

கோப்புப்படம்

புதுச்சேரி: புதுச்சேரியின் பண்டைய துறை முகமான அரிக்கமேட்டுடன் தொடர்புடைய உள்ளூர் வணிக நகரங்களை கண்டறிய புராணசிங்கு பாளையத்தில் அரசு சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு மத்திய தொல் லியல்துறை அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

பண்டைய காலத்தில் கிழக்கு கடற்கரையோரம் பல வணிகத் தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், கொற்கை ஆகி யவை குறிப்பிடத்தக்கவை. இந்த பழங்கால துறைமுகங்களில் புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் மிகவும் செழிப்புற்று இருந்துள்ளது. அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது.

அயல்நாட்டு பயணிகளான பெரிபுளூஸ், தாலமி ஆகியோரும், காவிரிபூம்பட்டினம் - மரக்காணம் இடையே 'பொதுகே' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த 'பொதுகே' என்பது இன்றைய புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவு படுத்தி உள்ளனர்.

இதில், அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களும், வெளிநாடு களில் இருந்து கொண்டு வரப்பட்ட மட்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. பலவகைசுடுமண் விளக்குகளும் கூறை ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன.இதன்மூலம் பண்டைய காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லி யல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உறுதியானது. அதேநேரத்தில் அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பது கண்டறிய முடியவில்லை. இதனால், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிகத் தலங்களை கண்டறிந்து அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டது.

தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப் போது திருக்கனூர் அடுத்த புரா ணசிங்குபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பையாற்றின் ஓரத்தில் கி.பி.1-ம் நூற்றாண்டில் பயன்படுத்திய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் இருப்பதை கண்டறிந்தனர். கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கமேட் டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதினர்.

புராணசிங்குபாளையம் கோட் டைமேடு பம்பையாற்றங்கரையில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாகவே உள்ளன. இங்கு அறிவியல் ரீதியாக நவீன தொழில்நுட்களை பயன்படுத்தி அகழாய்வு மேற் கொள்வதன் மூலம் புதையுண்டு கிடக்கும் அக்கால தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளும், பண் டைய காலத்தில் பயன்படுத்திய கட்டிட கலையும் வெளிச்சத்திற்கு வரும் என்று கருதுகின்றனர்.

இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர்? இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது? என் பது தெளிவாக தெரிய வரும். எனவே கோட்டைமேட்டில் உள்ளபம்பையாற்று பகுதியில் அக ழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் அனு மதி வழங்கியுள்ளனர்.

மேலும், புதுச்சேரி அரசும் இந்த ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி முதல்கட்டமாக ரூ.20 லட்சம் பணமும் ஒதுக்கீடு செய் துள்ளது.

தற்போது தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், கோட்டைமேடு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனு மதி வழங்கக்கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி முதல்வருக்கு கடிதம்அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்தவுடன் அவர் தனது குழுவினருடன் அங்கு சென்று அகழாய்வு பணிகளை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x