

கூத்தாநல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கூத்தாநல்லூரில் நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூத்தாநல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். ஜவஹர்லால் நேரு கொரடாச்சேரியில் தொடங்கி வைத்த அரசு மருத்துவமனை, அதிமுக ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டுவிட்டது. அந்த மருத்துவமனையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், இப்பகுதி வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி திருத்துறைப்பூண்டியில் ஆவின் பால் நிலையம் உருவாக்கப்படும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, மன்னார்குடி பெரியார் சிலை அருகில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாக்கு கேட்டு கருணாநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது, “என்னுடைய நண்பர் மன்னை. நாராயணசாமியின் ஊரில் போட்டியிடும் டிஆர்பி ராஜாவுக்கு நீங்கள் மகத்தான வெற்றியை தேடித்தர வேண்டும்” என்றார்.