Published : 22 Apr 2016 09:03 AM
Last Updated : 22 Apr 2016 09:03 AM

அதிமுக வேட்பாளர் மாற்றத்துக்கு காரணமான போலி நீதிமன்ற உத்தரவை தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது யார்?- சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண் டம் அதிமுக வேட்பாளர் மாற்றத் துக்குக் காரணமான போலி நீதிமன்ற உத்தரவைத் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப் பியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் எம்.புவனேஸ் வரன். இவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் சில நாட் களுக்கு முன்பு வாட்ஸ்அப், முக நூல் உள்ளிட்ட வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இந்தத் தகவல் அதிமுக தலைமைக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து புவனேஸ்வரன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் அமைச்சர் சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில் புவனேஸ்வரன் போட்டியிடுவ தைத் தடுப்பதற்காக உயர் நீதிமன் றத்தில், புவனேஸ்வரானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கரூர் மாவட்டம் கோடாந்தூர் ஊராட்சித் தலைவர் ரவிசெல்வன் பெயரில் போலியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாகவும், அதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும் போலி யாக ஒரு உத்தரவு தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.

இதனிடையே ரவிசெல்வன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறுவதாக பதிவாளரிடம் கடிதம் அளிக்கப் பட்டது. அதற்காக அந்த மனு விசா ரணைக்கு வந்தபோது, புவனேஸ் வரன் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது. அப் போது புவனேஸ்வரன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்போது, ரவிசெல்வனை கொலை செய்ய முயன்றதாக புவனேஸ்வரன் மீது 2012-ல் பதிவான வழக்கு 2014-ல் முடிக்கப் பட்டது. அதை மறைத்து அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக பொய்யாக குறிப்பிட்டு அந்த வழக்கை விரைவில் விசாரிக்க உத்தரவிடக் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கைப் பயன்படுத்தி புவனேஸ்வரனுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அரசியல் எதிரிகள் தட்டிப்பறித்துள்ளனர். போலியாக நீதிமன்ற உத்தரவைத் தயாரித்து வலைதளங்களில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவில் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்ப பயன்படுத்தப்பட்ட 4 செல் போன் எண்களும் குறிப்பிடப் பட்டிருந்தது.

புகார்தாரரான ரவிசெல்வன் நேரில் ஆஜராகி வக்காலத்தில் கையெழுத்திட்டது நான்தான். ஆனால், இந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு என் சார்பில் வழக்கு தொடர ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிவித்தார். மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் வாதிடும்போது, ரவிசெல்வன் வக்காலத்துடன் சிலர் என்னை அணுகினர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்தேன் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் போலியாக ஒரு உத்தரவை பிறப்பித்து அதை வலைதளங்களில் பரப்பியது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸ் உதவி ஆணையர் ஜேசு ஜெயபாலன் வழக்கு பதிவுசெய்து, போலி நீதிமன்ற உத்தரவைத் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்களைக் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x