Published : 25 Apr 2016 08:57 AM
Last Updated : 25 Apr 2016 08:57 AM

கரூரில் கைப்பற்றப்பட்ட பணம் போயஸ் கார்டனிலிருந்து வந்ததா? - வைகோ சந்தேகம்

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது:

மதுவிலக்கு குறித்து பேச ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்குமே தார்மிக உரிமை கிடையாது. திமுக ஆட்சியில் இருக் கும்போது அதிமுகவினரின் மது பான ஆலைகளிலிருந்தும், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுகவின ரின் மதுபான ஆலைகளிலிருந்தும் கோடிக்கணக்கில் மது வகைகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே, இவர்கள் மதுவிலக்கை கொண்டுவர மாட்டார்கள். கரூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.10 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் நாடகமாடுகின்றனர். ஆனால், அங்கு ரூ.5 கோடி வரை பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயற்சி செய்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பணம் போயஸ் கார்டனிலிருந்து வந்திருக்கலாம் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

அவசரக் காலங்களில் நோயாளி களை அழைத்துச் செல்லப் பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அதிமுகவினர் பணத்தைக் கொண்டு செல்லும் நிகழ்வு தொடருமானால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும். இது அபாயகரமானதும்கூட. எனவே, இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய ஆம்புலன்ஸ்களில் சோதனை நடத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மட்டுமின்றி, திமுகவினரும் ஆங் காங்கே பணத்தைப் பதுக்கியுள்ளனர். வாக்குப்பதிவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், இவற்றை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x