ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது என்று அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஏப்.3-ம் தேதி (இன்று) ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில், ‘‘ரமலான்மாத பிறை ஏப்.2-ம் தேதி (நேற்று)தென்பட்டதால், 3-ம் தேதி (இன்று)முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in