ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்

ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம்
Updated on
1 min read

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் நேற்று ஆந்திராமற்றும் தெலங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரினசம் செய்தனர்.

கோயில்களில் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் வழி பாட்டில் ஈடுபட்டனர். ஆந்திராவில் முக்கிய கோயில்களான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச் சானூர் பத்மாவதி தாயார் கோயில்,காணிப்பாக்கம் விநாயகர் கோயில், காளஹஸ்தி சிவன் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், சிம்மாத்ரி அப்பண்ணா கோயில், அஹோபிலம் நரசிம்மர் கோயில், சைலம்மல்லிகார்ஜுனர் கோயில், மந்திராலயம் ராகவேந்திரர் கோயில் ஆகிய வற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதுபோல் சிறிய கோயில்களில் ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.

ஆந்திராவில் குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஜீயர் சுவாமிகள் மூலவருக்கு புதிய பட்டாடையை சீர்வரிசையுடன் வழங்கினார்.

மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக் கப்பட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே தேவஸ்தான தோட்டக்கலை சார்பில் வைக்கப் பட்டிருந்த கலைநயம் மிகுந்த பூங்கா பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை 150 ஊழியர்கள் 3 நாட்களாக இரவும், பகலும் பாடுபட்டு தயாரித்ததாக அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார். உகாதியைமுன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

தெலங்கானா மாநிலத்திலும் அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in