Published : 03 Apr 2022 05:54 AM
Last Updated : 03 Apr 2022 05:54 AM

கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு அமைப்பு

சென்னை

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உண்மை அறியும் விசாரணைக் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவத்தில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது.

இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன், வி.சேகர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை அறியும் விசாரணைக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நீதியரசர் தலைமையில் உண்மை அறியும் விசாரணைக் குழுவை அமைக்குமாறும், அந்த விசாரணைக் குழுவுக்கு உதவிபுரியத் தேவையான அலுவலர்களை ஓய்வுபெற்ற நீதியரசர் கே.வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்குமாறும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறநிலையத் துறை ஆணையரின் பரிந்துரையை அரசு கவனமாகப் பரிசீலினை செய்தது. பின்னர்அதை ஏற்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவில் உள்ளஅம்பாள் கற்சிலை மாற்றப்பட்டதுகுறித்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதியரசர்கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவை அமைத்தும் அக்குழுவுக்கு உதவிபுரியத் தேவையான அலுவலர்களை ஓய்வுபெற்றநீதியரசர் கே.வெங்கட்ராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்யஅறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x