

பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால் திமுக நிர்வாகிகளுக்கு எதிராகப் போட்டியிடுவோம். பாஜக இளைஞரணியினர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்தால், உறுப்பினர் ஒப்புகைச் சீட்டை வாங்கி வைத்துக்கொள்ளவும். உறுப்பினராக இல்லையென்றால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோன்ற பணிகளில் இருப்பது, பாஜக நீண்டகாலம் தேசத்தை ஆள்வதற்கும், அதன் மூலம் நமது சித்தாந்தத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.