முதல்வரின் முகவரி துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 33122 மனுக்களுக்கு தீர்வு

விழுப்புரம் மாவட்டத்தில்  முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான  நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்  ஆட்சியர் மோகன் பேசுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் மோகன் பேசுகிறார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும்நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில், முதல்வரின் முகவரி துறையின் கீழ் இதுவரை 81,913 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் உடனடி நடவடிக்கையாக 33,122 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 37,122 மனுக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்காததால், அவர்களிடம் உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பிக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன.

மாவட்ட அளவில் உள்ள அலுவலர்கள் தங்கள் துறைக்கு வரும் கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதமின்றி தீர்வுகாண வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், முதல்வரின் முகவரித்துறை தனித் துணை ஆட்சியர் லட்சுமிப்பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in